பாடசாலையின் வரலாற்றுச் சுருக்கம்

தியாகிகள் தீவு என வர்ணிக்கப்படும் மன்னார் மாவட்டத்தில் கலங்கரை விளக்காக ஒளிரும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி தனிப்பெரும் கத்தோலி;க்க பாடசாலையாக மிளிர்வது மன்னார் தீவகத்திற்கும் முழு மாவட்டத்திற்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும்.இப்பாடசாலையின் வளர்ச்சிப்பாதை மிக நீண்டதும் நிலைத்ததுமான வரலாற்று சிறப்புடையது. புனித காணிக்கை மரியன்னை ஆலய வளர்ச்சியுடன் மன்னாரின் கல்வி வளர்ச்சியும் ஒன்றிணைந்து முன்னேறியது பற்றி வரலாற்றுக் குறிப்புக்கள் சான்று பகர்கின்றன.


புனித பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் 1542ல் தென்னிந்தியாவிலிருந்து மன்னாரிற்கு வருகை தந்த அருட்பணியாளர்கள் சமயக் கல்வியுடன் பிள்ளைகளுக்கான அடிப்படைக்கல்வி அறிவையையும் வழங்க தாய்மொழிப்பாடசாலையை ஆரம்பித்தனர்.இப்பாடசாலையின் வளரச்சிப்படியாக 1870ல் அருட்திரு புத்தேன் அடிகளார் முயற்சியால் நல்லாயன் தமிழ்ப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.பின் ஆங்கிலக்கல்வியி;ன் அவசியம் உணரப்பட்டு (ANGELO VENOCULOR|) பாடசாலையாக மாற்றப்பட்டது. (மன்னார் பங்கு மறை வளர்ச்சிப் பக்கம் 24) வண பிதா பொஸ்ரின் (Rev.Fr.Boxtin )(O.M.I)) அவர்களின் அயராத உழைப்பினால் இப்பாடசாலை உயர்வு பெற்று வளர்ச்சியடைந்தது.

அருட் திரு மியூரி அடிகளார் காலத்தில் 1894ல் புனித சூசையப்பர் சபை சந்நியாச சகோதரர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று நடாத்தி வந்தனர்.1904ல் சூசையப்பர் சபை அருட்சகோ. பீலீக்ஸ் அதிபராக பணிபுரிந்து தன்னிகரற்ற பணியாற்றினார்.1907ல் அமல மரி;த்தியாகிகள் சபைக்குருக்கள் மரியன்னை ஆலய பங்கு குருமனையில் குடியிருந்து தம் பணியாற்றிய போது இப்பாடசாலையைப் பொறுப்பேற்று நடாத்தினர்.(யாழ் மறைமாவட்டம் அதிகாரம்; 5 பக்கம் 102) இவர்கள் வசித்த இல்லமே தற்போது டிலாசால் தொழிநுட்ப பயிற்சிக் கூடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றதுääஇவர்களின் அயராத உழைப்பினால் கல்லூரி உயர்வு பெற்று வளர்ந்து வந்தது என்பது வரலாறு.

ஆண்களுக்கான பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி பெண்களுக்கு கல்வி வசதி இல்லாத குறை நீக்க 1925ல் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது.ஆயினும் 1948ல் பிரதம குருவாக இருந்த பீற்றர் அடிகளார் 14.11.1949 ஆண்ääபெண் என்று தனித் தனியே பாடசாலைகளை நடைமுறைப்படுத்தினார்.1950ல் ஆரம்பப்பாடசாலையாக இருந்த இப்பாடசாலை கனிஸ்ட பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதுடன் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை என்ற பெயரைப் பெற்றது.

புனித சூசையப்பர் சபை சகோதரர்கள் 1946ல் மன்னாரை விட்டு நீங்கியமை ஒரு துரதிஸ்ட வசமான நிகழ்வு எனினும் புனித மரியன்னை திருவருளால் 1951ல் இக்கல்லூரிக்கு குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று ஏற்பட்டது.அவ்வேளை யாழ் ஆயராக கடமையாற்றிய அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி எமிலியானுஸ்பிள்ளை அடிகள் புனித ஜோண் பப்ரிஸ்ற் டிலாசால துறவற சபையினரிடம் இக்கல்லூரியை பொறுப்பளித்தார்.

இவ்வேளை டிலாசால் அருட்சகோதரர்களின் இலங்கைக்கான தலைமைப்பதவி வகித்தவர் ஆயர் கலாநிதி எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் சகோதரான அருட்சகோதரர் லூக் ஆவார்.இந்நிகழ்வானது எம் கல்லூரி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அம்சமாகும். அக்காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்.அருட்சகோதர்கள் சீசர்,கில்லறி ஜோசப் பொணிப்பாஸ் ஆகியோராவார்.இவர்களே மன்னார்மாவட்டத்தில் முதன்முதலில் டிலாசால் அருட்சகோதரர்களாகப் பணியாற்றியவராவர்.இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பான சிரந்; தாழ்ந்த வணக்கங்கள்.இவ்வேளையில் தான் புனித மரியன்னை ஆலய வளவில் கல்லூரியும்,டிலாசால் சபையும் அமைக்கப்பட்டது.( புனித மரியன்னை ஆலயம் 160வது ஆண்டு நிறைவு மலர் ).


தொடர்ந்து 1951-1956 வரை அருட்சகோதரர் சீசர் அல்பேட் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்று சிறப்பான பணியாற்றினார்.அவரைத் தொடர்ந்து அருட்சகோதரர் கியூ பிறிங்ரன் 1956-1957 வரை பணி புரிந்தார். அவரைத் தொடர்ந்து இக்கல்லூரிக்கென சிறப்பு பணியாற்றியவர். அருட்சகோதரர் லூக் ஆவார்.இவர் 30.07.1957-1959 வரை அதிபராகப் பணியாற்றினார்.


01..01.1959ல் இருந்து அருட்சகோhர் கில்லறி ஜோசப் அவர்கள் அதிபர் பணியை ஆற்றி வந்தார்.திரு.ஓ.கு.பங்கிராஸ் அவர்கள் 19.07.76-1980 வரை இக்கல்லூரியின் அதிபராக பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து அருட்சகோதரர் மு.பஸ்ரியன் அவர்கள் 27.08.1980-1983 வரை அதிபராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து அருட்சகோதரர் மைக்கல் 13.01.1983 -1987 வரையும் திரு.வேதநாயகம் அவர்கள் 01.08.1987-1990 வரையும் திரு.ஆ.லியோன் றெவல் அவர்கள் 01.09.1993-18.05.1997 தமது சிறப்பு பணிகளாலும் அயராத உழைப்பினாலும் அதிபர்களாக பணியாற்றி பற்பல சாதனைகளை படைத்துள்ளனர்.இவர்களையும் எமது கல்லூரிச் சமூகம் நன்றியுடன் நினைவு கூருகின்றது.


இவர்களைத் தொடர்ந்து 19.05.1997 இல் இருந்து 29.10.2010 வரை அருட்சகோதரர் யோக்கிம் ஸ்ரனிஸ்லொஸ் தனது அளப்பரிய பணியை இக்கல்லாரிக்கு ஆற்றினார்.இவருடைய காலப்பகுதியில் இப்பாடசாலையானது 16.02.1999 இல் புனித சவேரியார் ஆண்கள் புனித சவேரியார் ஆண்கள் கனிஸ்ட பாடசாலை என்றும் புனித சவேரியார் ஆண்கள் சிரேஸ்ட பாடசாலை என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கனிஸ்ட பாடசாலைக்கு அருட்சகோதரர் ளு.நு.விஜயதாசன் அவர்களும் சிரேஷ்ட பாடசாலைக்கு அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லொஸ் அவர்களும் அதிபராகப் பணியாற்றினர்.இவ்வேளையில் 19.05.1999 இல் இப்பாடசாலையானது தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.தொடர்ந்து அருட்சகோதரர் S.E.விஜயதாசன் அவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றமையால் 23.07.2001 இல் பிரதி அதிபர் S.சந்தியோகு பதில் அதிபராக பணியேற்றார் இதனைத் தொடர்ந்து 31.02.2001 இல் இருந்து கல்வி உயர்கல்வி அமைச்சின் பணிப்புரைக்கமைய கனிஸ்ட பாடசாலைää சிரேஷ்ட பாடசாலை ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு மன்.புனித/சவேரியார் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயமாக அருட்சகோதரர். J..ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையில் இப்பாடசாலை நிர்வகிக்கப்பட்டது.

இவ்வேளை அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் உயர்கல்விக்காக சென்ற வேளை அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் பதில் அதிபராகப் பொறுப்பேற்று இக்கல்லூரியை 29.08.2004 வரை நிர்வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 02.05.2011ல் இருந்து அருட்சகோதரர் யோசப் ஒகஸ்ரின் அவர்கள் இக்கல்லூரியைப் பொறுப்பேற்று 28.02.2016 வரை இக்கல்லூரியை நிர்வகித்தார்.இவரைத் தொடர்ந்து 29.02.2016ல் இருந்து இன்று வரை அருட்சகோதரர் S.|E.றெஜினோல்ட் அவர்கள் இக்கல்லூரியைப் அவர்கள் இக்கல்லூரியைப் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றார்.